தகவல்

வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் மீது குண்டுத் தாக்குதல்: 12 பேர் பலி- 20 பேர் காயம்

ஜூன் 16, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

வவுனியா நகரில் உள்ள சிறிலங்கா காவல்துறை அத்தியட்சகரின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 12 சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.வவுனியா காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் இருந்து கடமைகளுக்காக புறப்பட்ட காவல்துறையினரை இலக்கு வைத்து இன்று திங்கட்கிழமை காலை 7:10 மணியளவில் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

4523698.jpgகொல்லப்பட்ட 12 காவல்துறையினரில் 3 பெண் கான்ஸ்டபிள்களும் அடங்குவர் என்று வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் என்று வவுனியா காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

காயமடைந்த 20 பேரும் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதினம்

→ No Commentsபகுப்புகள்: அதிரடிச் செய்திகள்
குறிச்சொல்லிடப்பட்டது: , , , ,

சைவத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி இன்று காலமானார்.

ஜூன் 15, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

வீரகேசரி இணையம்: அண்மைக்காலமாக நோய் வாய்ப்பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 83.

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகியாக இருந்து சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார்.

பல நாடுகளுக்கும் சென்று சைவ சொற்பொழிவுகள் ஆற்றியும் தனது ஆதரவு இல்லங்களுக்கு நிதி திரட்டியும் இறக்கும் வரை தனது பணியைச் செவ்வனே செய்து வந்தார்.

தெல்லிப்பழையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது உடல் நாளை தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய அறங்காவலர் சபையிடம் கையளிக்கப்பட்டு அங்குள்ள யாத்திரிகர் மடத்தில் வணக்கத்துக்கு வைக்கப்படும்.

பின்னர் மாலை இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்பாணத்தில் சிறந்த சமூகசேவையாளராக செயற்பட்டு வந்தவர். தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகச் செயற்பட்டு வந்தவர்.

இவரின் சேவையைப் பாராட்டிய யாழ் பல்கலைக்கழகத்தினால் கௌரவ முனைவர் (காலநிதி) பட்டம் கொடுத்து மதிப்பளித்தது. அமெரிக்கா ஹாவாய் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆச்சிரமம் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்துப்பணி விருதை அம்மையாருக்கு வழங்கியது. அகில இலங்கை இந்து மாமன்றம் 2005 ஜூலை மாதத்தில் யாழ் மண்ணில் பொன் விழாவையொட்டி இந்து மாநாடு நடத்தியபோது அன்னைக்கு தெய்வத் திருமகள் என்ற பட்டம் வழங்கி மதிப்பளித்தது.

1925 ஆம் ஆண்டு யூலை 07ம் நாள் பிறந்த இவர் தனது 83வது அகவையில் இறைபதம் அடைந்தார். தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான தலைவியும் ஆதரவற்ற குழந்தைகளின் காப்பகப் பொறுப்பாளருமான சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

→ No Commentsபகுப்புகள்: செய்திகள்
குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , ,

பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை விடயத்தில் பிரிட்டன் இரட்டை வேடம் என மஹிந்தர் சாடல் பிரசார யுத்தத்தில் புலிகளிடம் தோற்றுவிட்டோம் என்றும் கூறுகிறார்

ஜூன் 14, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிரிட்டன் தடை செய்துள்ள அதேவேளை, அங்குள்ள இலங்கையர்களிடம் அது நிதி சேகரிப்பதற்கு அனுமதியளித்துள்ளது எனத் தெரிவித்திருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இதன் மூலம் பிரிட்டன் தனது பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை தொடர்பாக இரட்டை வேடமிடுகின்றது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
லண்டனிலிருந்து வெளியாகும் “த டைம்ஸ்’ இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் எனக் குறிப்பிட்டுள்ளது.
பொதுநலவாயத் தலைவர்கள் மாநாட்டிற்காக பிரிட்டன் சென்றிருந்த வேளை மேற்படி செய்திப் பத்திரிகைக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுணுடனான தமது சந்திப்பின் போதும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்விடயம் குறித்து அவரது கவனத்தை ஈர்த்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனிலுள்ள தமிழ் சமூகத்திடமிருந்து விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் வருடாந்தம் மில்லியன் கணக்கான பவுண்ட்ஸ்களைச் சேகரிக்கின்றனர். சிலர் நிதியுதவியை வழங்குமாறு பலவந்தப்படுத்தப்படுகின்றனர் என ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதம் தொடர்பாக இரு வேறு அணுகுமுறை இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “நல்ல பயங்கரவாதிகள்’, “கெட்ட பயங்கரவாதிகள்’ என்பதை நான் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரே வகையான பயங்கரவாதிகள் மாத்திரமேயுள்ளனர் என மேலும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் உள்ளனர். இவர்களில அனேகமானவர்கள் வட லண்டனிலேயே வாழ்கின்றனர் எனத் தெரிவித்துள்ள டைம்ஸ், வருடாந்தம் ஏழு கோடி பவுணட்ஸ் இலங்கைக்கு அனுப்பப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவை சுயவிருப்பின் பேரில் வழங்கப்படுபவையல்ல. நிதி வலுக்கட்டாயமாக எடுக்கப்படுகின்றது. தமிழர்களின் வருமானத்தின் ஒரு பகுதியாக இவை வசூலிக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ராஜபக்ஷ, இந்த நிதி ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக அனுப்பப்படுகின்றது என்றும் கூறுகிறார்.
இப்படி லண்டனிலிருந்து மாத்திரம் பணம் அனுப்பப்படவில்லை. ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலிருந்தும், கனடா உட்பட ஏனைய பகுதிகளிலிருந்தும் நிதி அனுப்பப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தான் நடவடிக்கை எடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த, விடுதலைப் புலிகளின் திறமையான பிரசாரமே தனது அரசின் நற்பெயர் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டுள்ளமைக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரசார யுத்தத்தில் நாம் தோற்றுவிட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, இலங்கையின் உல்லாசப் பயணத்துறை பாதிக்கப்பட்டுள்ளமை போன்றவற்றின் மத்தியிலும் கூட நாம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை ஆரம்பிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். அந்த அமைப்பு முதலில் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தாங்கள் பலவீனமாக உள்ள சமயத்தில் சர்வதேச சமூகத்தை யுத்தநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கோருவார்கள். இக்காலப் பகுதியில் அவர்கள் மீண்டும் போரிடுவதற்காகத் தம்மைப் பலப்படுத்துவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இம்முறை அவர்கள் பேச்சுகளில் ஈடுபட விரும்பினால் முதலில் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்றார் ஜனாதிபதி.
விடுதலைப் புலிகள் இந்த முன் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டாலும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவருடன் தான் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
“”இந்த மனிதரும், அவரைச் சுற்றியுள்ள மூன்று நான்கு அடியாட்களும் இரத்த வெறி பிடித்தவர்கள். அவர்கள் உணர்வில்லாதவர்கள்” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சுடர் ஒளி

→ No Commentsபகுப்புகள்: பிரதான செய்திகள்
குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , ,

ஏகாதிபத்தியவாதத்தை வென்றெடுக்க கூட்டிணையுமாறு சந்திரிகா வேண்டுகோள

ஜூன் 13, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிரவாதம் மற்றும் ஏகாதிப்பத்தியம் ஆகியவற்றில் நாட்டை மீட்பதற்கு அனைவரும் இணைந்து புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீர தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் முதலாவது பிரதிநிதிகள் குழுக்கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. Keep reading →

→ No Commentsபகுப்புகள்: பிரதான செய்திகள்
குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , ,

பிரபாகரனை உயிருடன் கைது செய்வதே படையெடுப்பின் நோக்கம் இராணுவத் தளபதி கூறுகிறார்

ஜூன் 12, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

வீரகேசரி நாளேடு
நாட்டின் பல்வேறு இடங்களுக்குள் ஊடுருவி பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் விடுதலைப் புலி உறுப்பினர்களை அவர்கள் மறைந்துள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து விரட்டியடித்து பிரபாகரனை உயிருடன் கைது செய்வதே பிரபாகரனை வன்னி படையெடுப்பின் முக்கிய நோக்கமாகவுள்ளது. Keep reading →

→ No Commentsபகுப்புகள்: பிரதான செய்திகள்
குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , ,

கொட்டாஞ்சேனை, வத்தளை பகுதிகளில் ஆயுததாரிகளால் தமிழர்கள் மூவர் கடத்தல் வீட்டிலிருந்த இளைஞனையும் காணவில்லை

ஜூன் 12, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

வீரகேசரி நாளேடு
கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளைப் பகுதிகளில் தமிழர்கள் மூவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதுடன் மற்றொரு இளைஞன் காணாமல் போயுள்ளார். கடத்தப்பட்டவர்களில் ஒருவர் விடுதி ஒன்றின் முகாமை யாளராவார். Keep reading →

→ No Commentsபகுப்புகள்: அதிரடிச் செய்திகள்
குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , ,

வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 19 படையினர் பலி-23 பேர் படுகாயம்

ஜூன் 12, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

வவுனியா மாவட்டம் குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறிகடிக்கப்பட்டுள்ளது. இதில் 19 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 23-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். Keep reading →

→ No Commentsபகுப்புகள்: அதிரடிச் செய்திகள்
குறிச்சொல்லிடப்பட்டது: , ,

சேரன் கொமாண்டோ அணியினரால் மன்னார் கூட்டுப்படைத்தளம் தாக்கியழிப்பு: 10 படையினர் பலி- பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு

ஜூன் 12, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

மன்னார் தீவுக்குள் உள்ள எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையினரின் கூட்டுப்படைத்தளம், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் 10-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ராடார் உட்பட பெருமளவிலான போர்க்கலங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த மாதம் வீரச்சாவடைந்த கடற்புலிகளின் சிறப்பு இயந்திரப் பொறியியலாளரான லெப். கேணல் கடாபி நினைவாக கடற்புலிகளின் லெப். கேணல் சேரன் கொமாண்டோ அணியினரால் இன்று புதன்கிழமை அதிகாலை 2:08 மணிக்கு எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையின் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் தளம் 10 நிமிடத்துக்குள் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மன்னார் தீவின் நடுவில் பெரும் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் எருக்கலம்பிட்டி கடற்படைத்தளம் உள்ளது.

இதில் 10-க்கும் அதிகமான சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டனர். பெருமளவிலான படையினர் காயமடைந்துள்ளர். ஏனைய படையினர் தப்பியோடி விட்டனர்.

சிறிலங்கா கடற்படையின் கஜபா படைப்பிரிவின் ஏ கொம்பனி அணியினரே விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் கொமாண்டோ அணியினரால் தாக்கியழிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஆயுத விபரம்:

ராடார் முழுத்தொகுதி -01

50 கலிபர் துப்பாக்கி - 01

50 கலிபர் துப்பாக்கி சுடுகுழல் - 01

50 கலிபர் ரவைப் பெட்டிகள் - 10

50 கலிபர் ரவைகள் - 1,195

81 மில்லி மீற்றர் மோட்டார்கள் - 02

81 மில்லிமீற்றர் எறிகணைகள் - 203

81 மில்லிமீற்றர் பரா - 07

பிகே எல்எம்ஜி - 01

பிகேஎல்எம்ஜி ரவைகள் - 563

ஆர்பிஜி - 01

60 மில்லி மீற்றர் மோட்டர்கள் - 02

60 மில்லி மீற்றர் எறிகணைகள் - 65

60 மில்லி மீற்றர் பரா வெளிச்சக்கூடுகள் - 12

ஆர்பிஜி எறிகணைகள் - 06

ஆர்பிஜி புறப்ளர் - 05

தொலைநோக்கி தொகுதி - 01

ஏகேஎல்எம்ஜி - 01

ஏகேஎல்எம்ஜி இணைப்பிகள் - 675

ஏகேஎல்எம்ஜி ரம் ரவைக்கூடுகள் - 08

ரி-56-2 ரக துப்பாக்கி - 01

ரவைக்கூடுகள் - 09

நடுத்தர ரவைகள் - 5,870

மின்னேற்றி - 01

மின்கலம் - 01

மின் சீராக்கி - 01

ஜக்கற் ரவைக்கூடுதாங்கி - 01

கவச அணி - 01

நில அளவி - 01

செல்லிடப்பேசிகள் - 03

தொலைபேசி - 01

பை - 01

சப்பாத்து - 2 இணைகள்

கத்தி - 01

ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தாக்குதலில் கடற்புலிகளின் லெப். கேணல் சேரன் கொமாண்டோ அணியினர் கடற்படைத்தள அழிப்புத்தாக்குதலில் ஈடுபட, வழிமறிப்புத்தாக்குதலை கடற்புலிகளின் லெப். கேணல் புனிதா படையணி, லெப். கேணல் எழில்கண்ணன் படையணி ஆகியன ஈடுபட்டன.

தாக்குதலில் ஈருட அணியை முழுமையாக கடற்புலிகளின் கட்டளைத்தளபதி விடுதலை வழிநடத்த, கடல் தாக்குதலை கட்டளைத்தளபதி இளங்கோ வழி நடத்தினார்.

சிறிலங்கா கடற்படைக்கு பெரும் அதிர்ச்சியையும் இழப்பையும் ஏற்படுத்திய இத்தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்றார் அவர்.

svgallery=MannarNC

படங்கள்: விடுதலைப் புலிகள்
மூலப்பதிவு: புதினம்

→ No Commentsபகுப்புகள்: பிரதான செய்திகள்
குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , ,

கண்டியில் பேருந்துக்குள் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி- 15 பேர் காயம

ஜூன் 6, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

கண்டி பொல்கெல திறந்த பல்கலைக்கழகப் பகுதியில் பேருந்துக்குள் குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர்.வத்தேகமுவவில் இருந்து கண்டி கட்டுகஸ்தொட்ட நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்தின் உள்ளேயே இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மாலை 3:50 மணியளவில் இக்குண்டு வெடித்துள்ளது. Keep reading →

→ No Commentsபகுப்புகள்: அதிரடிச் செய்திகள்
குறிச்சொல்லிடப்பட்டது: , , , , ,

மொறட்டுவ, கட்டுபெத்த பல்கலைக்கழக வளாகத்துக்கு அண்மையில் பேரூந்தில் பயங்கர குண்டு வெடிப்பு - 20 பேர் பலி; 53 பேர் படுகாயம்

ஜூன் 6, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவவில் பேருந்துக்குள் இன்று வெள்ளிக்கிழமை காலை 7:35 மணியளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 53 பேர் காயமடைந்துள்ளனர். பலியாகியோரில் 13 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது. Keep reading →

→ No Commentsபகுப்புகள்: பிரதான செய்திகள்
குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , ,